அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் கோர்ட் ஜாமின் வழங்கியது.
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமின் தாக்கல் செய்தால், ஆனால் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஜோ மைக்கேல் என்பவர் தொடந்துள்ள வழக்கில் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு இன்று எழும்பூர் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.