தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது

தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது என்று இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
ரோஜின் தாமஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஹோம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.
தற்போது ‘ஹோம்’ பார்த்துவிட்டு இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
“கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்…வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை ‘ஹோம்’ திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதி உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி #home.
மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது. தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கத் தவறியதின் துயரத்தை அனுபவிக்கிறோம்”
இவ்வாறு வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

Related posts