நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் பைக்கில் சென்றுவந்தார்.
அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகை ஹூமா குரேஸி ஹீரோயினாக நடிக்கிறார்.எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கார் சண்டைகாட்சி ஒன்று படமாக்க வேண்டி இருந்தது. இந்த காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு இருந்தனர்.
கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா சென்றனர். அங்கு பிரம்மாண்டமானகார் சண்டை காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷியாவிலேயே தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ரஷியாவில் படப்பிடிப்பை முடித்த அஜீத்,ரஷ்யா முழுவதும் 5,000 கிமீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். ந
இந்த நிலையில் ரஷியாவில் உயர் ரக மோட்டார் சைக்கிளுடன் அஜித் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் மோட்டார் சைக்கிளில் சென்றுவந்தார்.
அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத மோட்டார் சைக்கிள் பயணங்கள் அவரது பயணத்தின் மீதான ஆர்வத்தை காட்டுகின்றன.
வெவ்வேறு நிலப்பரப்புகள் மற்றும் வானிலை நிலைமைகளுடன் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள , அஜித் தனது மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தீவிரமாக பரிசீலித்து வருவதாக சமீபத்தில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்து இருந்தன.