வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுப் பெற்றது.
ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று நேற்று முன்தினம் மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவுற்றது.
நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இம்முறை மகோற்சவ திருவிழாக்கள் உள்வீதியில் பக்தர்களின் பங்கேற்பு இன்றி, சிவாச்சாரியார்களுடன் நடைபெற்றது.
அதனால் இம்முறை ஆலய சித்திர தேர் இழுக்காது உள்வீதியில் சிறிய தேரில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன் ஆரோகணித்து உள்வீதியுலா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.