அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த அமர்விலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—–
இலங்கையில் தற்போது பதிவாகவும் தொற்றாளர்களில் 95.8 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்றுள்ள மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் ஆய்வாளர்களான பேராசிரியர் நீலிகா மாளவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் சில மாகாணங்களில் பதிவாகவும் தொற்றாளர்களில் 84 முதல் 100 % வரை டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
——-
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர்.
இவ்விஜயத்தின் போது பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளவுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.