பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரியங்கா திப்ரேவாலை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும்,வேளாண்அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி இப்போது மம்தாவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது.
இதனால், இடைத் தேர்தலில் மம்தாவுக்கு எதிராக எந்த வேட்பாளரையும் காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை எனத் தெரிகிறது.
இந்தநிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரியங்கா திப்ரேவாலை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகரான பிரியங்கா திப்ரேவால் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவர், திரிணாமுல் காங்கிரஸ் போட்டியாளரிடம் தோல்வியடைந்தார்.