நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் ரூ.2. லடசம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பிரபல காமெடி நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அதே போல, நடிகர்கள் விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.