நாட்டில் மீண்டும் மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை தொடர்பில் விரிவானதும் முறையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கத்தோலிக்கத் திருச்சபை பொலிஸ்மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கத்தோலிக்க திருச்சபையின் தொடர்பாடல் பணிப்பாளர் சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஞானசார தேரர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் 2017ஆம் ஆண்டு தெரிவித்திருந்ததாக அவர் தற்போது தெரிவித்து வருவதாகவும் அதனை முற்றாக நிராகரிப்பதாக சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் நேற்று தெரிவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறா
னதொரு தகவலையோ எச்சரிக்கையையோ ஞானசார தேரர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அப்போது தெரிவித்திருக்கவில்லை என்பதை சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் குறிப்பிட்டார்.