இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் இன்று (20) காலை இலங்கையை வந்தடைந்தனர்.
கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு, இத்தாலிக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போலோக்னாவில் இடம்பெற்ற G-20 சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டார்.
ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான செப்டெம்பர் 12ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, குறித்த மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் சிங்கப்பூரில் இருந்து UL 309 எனும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம், இலங்கையை வந்தடைந்தனர்.
G20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30-31 ஆகிய இரு தினங்கள் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதோடு, இதில் இந்தியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.