கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இல்லாமையினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீ தரன் இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைத்த வாய் மூலமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்த பிரச்சினை தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.
நாடுமுழுவதும் தபால் மற்றும் உப தபாலகங்களை அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் 2020/2021 மற்றும் எதிர்வரும் வருடங்களிலும் கட்டிட நிர்மாணங்கள் இடம்பெறாத போதிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாதும் போது இந்த மாகாணத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.