இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
அதேபோல் இலங்கையின் வெளியுறவு செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
——
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு சென்றுள்ளார்.
கீழ் மட்ட தாங்கி வளாகத்தின் வளர்ச்சி மற்றும் இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை IOC நிறுவனம் இதன்போது இந்திய வெளியுறவு செயலாளருக்கு விளக்கமளித்துள்ளது.
அத்துடன் IOC நிறுவனத்தின் புதிய படைப்பான ´Servo Pride ALT 15W- 40´ இதன்போது வௌியிடப்பட்டது.
—-
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சி நாளை (04) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.
நட்புறவு சக்தி என்ற இந்த பயிற்சி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக 18 இந்திய இந்திய அதிகாரிகள் அடங்கலாக 120 வீரர்கள் நேற்றைய தினம் விமானம் மூலம் மத்தளை விமான நிலைய விமானத்தை வந்தடைந்தனர்.
இந்திய இராணுவத்தின் கேனல் பிரகாஷ் குமார் தலைமையிலான வீரர்கள். நட்பறவு சக்தி கூட்டு பயிற்சி பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் பீ,என். கோகேல்வத்த தலைமையில் வரவேற்கப்பட்டனர்.