சீன ராணுவத்தின் எல்லை ரோந்து மற்றும் வருடாந்திர பயிற்சிகள் அதிகரித்து உள்ளதாக கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.
எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சீன ராணுவத்தின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளதாக கூறியுள்ள கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்து உள்ளார்.
சீன ராணுவத்தின் எல்லை ரோந்து மற்றும் வருடாந்திர பயிற்சிகள் அதிகரித்து உள்ளதாக கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாட்டு பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்கள் ஆயுதப்படைகளின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைக்கிறார்கள். இந்த ஆண்டு அட்ன் அளவு அதிகரித்துள்ளது மற்றும் அவை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வருகின்றன.
சில பகுதிகளில் சீனப்படை ரோந்துப் பணியில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் ரோந்து முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. ஆழமான பகுதிகளில் பயிற்சிகளில் வருடாந்திர பயிற்சியில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சீன நடவடிக்கை ஓரளவு அதிகரிப்பு இருந்தாலும், இரு நாடுகளும் உள்கட்டமைப்புகளை அதிகரித்து உள்ளன. இதனால், சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.சீன ராணுவத்தின் பிராந்திய திட்டங்களின்படி, எல்லை ஒட்டிய பகுதிகளில் கிராமங்கள் உருவாகி உள்ளன.
உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுக்கு ( எல்ஏசி ) அவை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது பொருத்து கவலைக்குரியதாக மாறுகிறது. எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க ஒவ்வொரு செக்டாரிலும் போதிய அளவு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறோம். எந்தத் தாக்குதலையும் சமாளிக்க ஒவ்வொரு துறையிலும் போதுமான பலம் நம்மிடம் உள்ளது என்று கூறினார்.