சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு நமல் ராஜபக்சே பரிசளித்தார்.
உத்தரபிரதேசம் குஷிநகர் விமான நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்க கொழும்புவில் இருந்து வந்த முதல் விமானத்தில் அந்நாட்டு மந்திரியும், இலங்கை நாட்டு பிரதமர் ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே வந்தர். இந்தநிலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து
சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு ராஜபக்சே மகன் நமல் பரிசளித்தார். இலங்கை பிரதமர் ராஜபக்சே அனுப்பிய தகவலையும் நமல் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நமல் ராஜபக்சே கூறுகையில் ”இரு நாடுகளுக்கிடையேயான வலுப்படுத்த உறவை வலுப்படுத்த இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்களை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.