மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
நேற்று நடைபெற்ற விழாவில் 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
பத்ம விருதுகள் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
கொரோனா காரணமாக கடந்த வருடம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. பத்மபூஷன் விருதுகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
தமிழ் மக்களின் மனம் கவர்ந்த மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார்.
அதே நேரம் அவரது நடிப்பு திறமையையும் புறம் தள்ளிவிட முடியாது. கேளடி கண்மணி தொடங்கி குணா, திருடா திருடா, காதலன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளார். இறுதியாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘அண்ணாத்த’ பாடலை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள்.
கமல்ஹாசனின் தெலுங்கு திரைப்படங்களில் அவருக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி. ரஜினிக்கும் சரி, கமலுக்கும் சரி, எஸ்.பி.பியின் குரல் மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்.