அருட் தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற ஒன்லைன் மூலமான கலந்துரையாடலில் அருட் தந்தை சிறில் காமினி உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி CIDயில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டைமைக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு ஆஜராகவில்லை என்பதுடன், கால அவகாசம் கோரிய நிலையில், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தார். இதன்போது அவர் தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.