நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் கதை தேர்வில் அதிக கவனம் வைக்கிறார். வித்தியாசமான கதை, கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார்.
ஏற்கனவே ஒரு படத்துக்கு ரூ.2.5 கோடி சம்பளம் வாங்கிய அவர் இப்போது ரூ.3 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடித்து அடுத்து ரிலீசாக உள்ள சாணி காகிதம் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.
1980-ம் ஆண்டில் நடக்கும் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நான்கு நிமிடங்கள் வரும் உணர்வுப்பூர்வமான காட்சியை கீர்த்தி சுரேஷ் ஒரே டேக்கில் நடித்து முடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார் என்கின்றனர். இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா, பெண்குயின் ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவந்த நிலையில் 3-வது படமாக சாணி காகிதம் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கிறது.