மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உழவே தலை! “ விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.