கடந்த பத்து மாதங்களில் ஏற்பட்ட நட்டத்தை கருத்திற் கொண்டு எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தொழிநுட்பத்துடன் ஒப்பிடும்போது இது 52 ஆண்டுகள் பழைமையான தொழிநுட்ப முறைமையுடன் இயங்குகின்ற நிறுவனமாகும். அதனைக் கொண்டு நடத்துவதே மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விற்கும் எந்த நோக்கமும் எமக்கு கிடையாது.50 நாட்களுக்கு இந்த நிலையத்தை மூடவே தீர்மானிக்கப்பட்டது, ஆனால் அதற்குள் மீண்டும் அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம்.
அதேபோல் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் தற்போது உள்ளோம், கடந்த காலத்தில் இதில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் கடந்த இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே விலை மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது திறைசேரியின் மூலமாக நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அது தொடர்பில் நிதியமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளோம்.
எவ்வாறெனினும், கடந்த ஆறு மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளாத உலகின் ஒரே நாடு இலங்கை என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.