நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஐதராபாத்தில் வசித்து வந்தார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும், நாக சைதன்யாவும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் எங்களை ஆதரியுங்கள். எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து இதனை எளிதாக கடந்துபோக எங்களுக்கு உதவுங்கள்” என்று நடிகை சமந்தா தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் பிலிம்ஃபேருக்கு பேட்டி அளித்த சமந்தா, “உங்களுக்கு ஒரு மோசமான நாள் என்றால் அதை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள் , அதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டுவிட்டாலே உங்கள் வேலை எளிதாகிவிடும். ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன். விவாகரத்து பிரிவால், நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் இவ்வளவு வலிமையானவளாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை . இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது.
எளிமையான தொடக்கத்தில் இருந்து வந்த நான் , எனது முதல் படத்திலேயே உடனடியாக வெற்றியைக் கண்டேன். அதனால் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக அனைவரும் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.பார்வையாளர்களிடமிருந்து நான் பெறும் அனைத்து அன்பிற்கும் நான் தகுதியானவள் அல்ல என்பது என்னை மேலும் நொறுங்க செய்கிறது.இப்பொது நான் அதை எதிர்த்து போராடுவதை நிறுத்திவிட்டேன் என்று அவர் கூறினார்.