வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த போரால் பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர்.
ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை வேறு சிலர் கைப்பற்றி விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும், போரால் கைவிடப்பட்ட நிலத்தை கைப்பற்றியவருக்கும் இடையே உரிமைச்சண்டை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு டாரப் மாகாணம் ஜபல் மூன் பகுதியில் ஒட்டகத்திருட்டில் ஈடுபட்டதாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 25 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து மேற்கு டாரப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவம் அரங்கேறியது. இந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 138 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மேற்கு டாரப் மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.