ஆபாச படங்களில் நடித்து நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.சன்னி லியோன் என்றாலே சர்ச்சை தான் அவர் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை.
சன்னி லியோன் படங்களில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தி கவர்ச்சி நடிகைகளும் சன்னி லியோனை வெளியேற்ற வேண்டும் என்று எதிர்த்து வருகிறார்கள்.
இந்தியாவில் ஆன்லைனில் அதிகளவு தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, சன்னி லியோனின் இந்தி பாப் பாடலான மதுபன், சரிகம என்ற தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் 1960களில் முகமது ரபியின் புகழ் பெற்ற பாடலால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பாடலில், சன்னி தனது அட்டகாச நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், நடிகையால் இந்தப் பாடலும் சர்ச்சைக்கு ஆளானது. நடிகையின் ஆபாச நடனத்தால் கிருஷ்ணரின் பிறந்த இடத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதாக வடநாட்டைச் சேர்ந்த பூசாரிகள் மற்றும் துறவிகளிடமிருந்து குற்றசாட்டு கிளம்பியது. இதனால் இந்த பாடலுக்கு பின்னடைவு கிடைத்தது. சில பிரிவினர் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என அரசாங்கத்தை அணுகியுள்ளனர். இந்த பாடல் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா எச்சரித்தார்.
இதையடுத்து அந்த பாடலை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் நடிகை சன்னிலியோன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது, பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து புத்தாண்டு தினத்தையொட்டி நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நடிகை சன்னிலியோன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல போராட்டங்களுக்கு பிறகு பெங்களூரு போலீஸ் கமிஷனர் அனுமதியை மறுத்தார்.
சன்னியின் நிகழ்ச்சிக்கு கர்நாடக ரக்ஷனா வேதிகே யுவ சேனே அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி தங்கள் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று கூறி சன்னியின் போஸ்டர்களை எரித்தனர்.
மேலும் சன்னிக்கு போராட்டக்காரர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சன்னி புடவையில் நடித்தால் பரவாயில்லை என்று மாநிலத் தலைவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து நவராத்திரி சமயத்தில், சன்னி லியோன் ஆணுறை பிராண்டின் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். குஜராத்தில் பொருத்தப்பட்டிருந்த அவரின் ஒரு டஜன் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடிகை ஆணுறை பிராண்டை விளம்பரப்படுத்தியதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன.’இந்த நவராத்திரியில் அன்புடன் விளையாடு’ என்ற விளம்பரத்தின் டேக் லைன் ஒரு பெரிய சீற்றத்தையே உருவாக்கியது.
சன்னி லியோன் மற்றும் டேனியல் வெப்பர் ஆகியோர் நாட்டில் புதிதாக வந்தபோது, நடிகை செலினா ஜெட்லி தனது குடியிருப்பை அவர்களுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். மேலும் மிக மோசமான நிலையில் வீட்டை விட்டுவிட்டு சன்னி மற்றும் அவரது கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக முன்னாள் நடிகை செலினா குற்றம் சாட்டியிருந்தார். சன்னி தனது வீட்டை வாடகைக்கு எடுத்ததிலிருந்து செலினா பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டதாக கூறப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கபில் சர்மா ஷோவில் தனது படத்தை விளம்பரப்படுத்த சன்னி நிராகரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின. நடிகையுடன் படப்பிடிப்பு நடத்த கபில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு ராகினி எம்எம்எஸ் 2-ஐ விளம்பரப்படுத்த ஏக்தா கபூருடன் அவர் நிகழ்ச்சியில் தோன்றியபோது வதந்திகள் மறைந்தன.
சன்னி லியோன் தனது சக நடிகர்களிடம் எச்.ஐ.வி பரிசோதனையை கேட்டுக்கொண்டதாக வதந்திகள் பரவியதால் சர்ச்சைக்குள்ளானது. எனினும், அவை உண்மைக்குப் புறம்பாக வெளியான வதந்திகள் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆதாரமற்ற வதந்திகளுக்கு சன்னி பதிலளிக்கவில்லை.
சன்னி லியோனின் பெயர் ஒரு டுவீட் சர்ச்சையில் சிக்கியது. நடிகையின் டுவீட் வைரலானபோது கமல் ஆர் கான் சன்னி லியோனை கடுமையாக சாடினார். கற்பழிப்பு ஒரு குற்றம் அல்ல, இது ஒரு ஆச்சரியமான செக்ஸ் என்று சன்னி லியோன் பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது.