உடன் அமுலுக்கு வரும் வகையில் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட ஶ்ரீ.ல.பொ.பெ. பாராளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக, பாராளுமன்றம் மற்றும் பல்வேறு கூட்டங்களில் அவர் அரசாங்கத்தை விமர்சனம் செய்து வந்திருந்த நிலையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி பெற்றுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாம் நாளை முதல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (04) காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு அமைச்சில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.