மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க ரூ.4 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் பரவியது. இந்த படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன.
தமிழில் வாலி, குஷி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி டைரக்டராக உயர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். ஏற்னவே மகேஷ்பாபுவின் ஸ்பைடர் தெலுங்கு படத்தில் சைக்கோ வில்லனாக வந்தார். விஜய்யின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார்.
சமீபத்தில் திரைக்கு வந்த மாநாடு படத்திலும் வில்லனாக நடித்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்தில் வில்லனாக நடிக்க ரூ.4 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் பரவியது. இந்த படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. மாநாடு படத்தின் வெற்றியால் எஸ்.ஜே.சூர்யா சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது விஷாலின் 33-வது படமான மார்க் ஆண்டனியில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ரூ.6 கோடி சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.5 கோடிக்கு பேசி முடித்து இருப்பதாகவும் இணைய தளங்களில் தகவல் கசிந்துள்ளது.