விஷ்ணு விஷாலிற்கு, ஷோபனாவுக்கு, குஷ்புவுக்கு கொரோனா

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், சத்யராஜ், நடிகை திரிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘2022 கொரோனா தொற்றுடன் தொடங்கி உள்ளது. நண்பர்களே எனக்கு எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 1 வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

——

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது.

தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

—–

இந்தநிலையில் நடிகையும் பா.ஜ.க.செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னை தனிமை படுத்திக் கொண்டதாகவும், தனிமையை வெறுக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் என்றும் குஷ்பு கூறியிருக்கிறார்.

Related posts