ஒமிகோண் கொரோனா பீ.ஏ.1 ஐ தொடர்ந்து பீ.ஏ.2 என்று இப்போது புதிது உலாவுகிறது. டெல்ரா கொரோனாவை அடுத்து வந்த கொரோனா ஒமிகோண் பீ.ஏ.1 என்று அழைக்கப்பட்டது இப்போது அதன் அடுத்த வடிவம் பீ.ஏ.2 கச்சோரியை ஆரம்பித்துள்ளது, இதன் பரவலாக்கம் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது.
புத்தாண்டின் பின்னதாக முன்னரே ஒரு தடவை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பலர் மீண்டும் தொற்றுக்குள்ளானார்கள். இத்தகையோரில் ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒருவர் பீ.ஏ.2 ஒமிகோணின் அடுத்த அலையால் பாதிக்கப்பட்டார்கள். இப்போது மொத்த தொற்றாளரில் சுமார் அரைப்பங்கினரை தொடவுள்ளது.
பீஏ1 ஒமிகோண் தொற்றியவர்களுக்கு பீ.ஏ.2 தொற்றாது என்று கூற முடியாது என்றும் வைத்தியர்கள் தகவல் தருகிறார்கள். முதல் தொற்றுக்குள்ளானவர்களில் பலவீனமானவர்கள் இரண்டாவது அலையை சந்திக்க நேரும் என்கிறார்கள். நோர்வேயில் பலருக்கு இது நடந்துள்ளது.
அதே வேளை பீ.ஏ.2 மிக ஆபத்தானதா இல்லையா என்பதை உடனடியாக கூற முடியாதென வைரஸ் பிரிவு நிபுணர் தெரிவிக்கிறார். நோர்வே, சுவீடன், பிரிட்டன் போன்ற நாடுகளில் பீ.ஏ.2 வேகமாக பரவி வலருவதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இப்போது கொரோனா 2 வது தடவை தொற்றிய பலரை சர்வசாதாரணமாக காண முடிகிறது. தடுப்பூசியும் மூன்று நான்கு என்று போக கொரோனாவும் பீ.ஏ.1, பீ.ஏ.2 என்று பின்னால் விரட்டிக் கொண்டிருக்கிறது.
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ..
அலைகள் 22.01.2022