தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் – நவம்பர் வரை பெறப்பட்ட வருவாய் – ரூ.19,000 கோடி என்றும், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் – நவம்பர் வரை பெறப்பட்ட வருவாய் – ரூ.21,000 கோடி என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.