டென்மார்க் ஸ்ரேற் மினிஸ்டர் மெற்ற பிரடிக்சன் நாளை புதன் மாலை 18.00 மணிக்கு பத்திரிகையாளர் மாநாட்டை கூட்ட இருக்கிறார், அவரிடம் கொரோனா தடைகளை விலத்துவது தொடர்பாக நல்ல செய்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனாவிற்காக போடப்பட்ட தடைகளில் பெரும்பாலானவற்றை வரும் 31ம் திகதியுடன் விலத்தும் தகவலை அவர் தரலாம் என்பது முதல் எதிர்பார்ப்பு, சபாஸ்.
எதிர்வரும் மாசி 5ம் திகதி முதல் கொரோனா சமுதாய ரீதியான பெரும் சுகயீனம் என்ற இடத்தில் இருந்து ஆபத்தான சுகயீனம் என்ற இடத்திற்கு மாறுகிறது.
காரணம் என்ன..?
கொரோனாவின் புதிய திரிபான ஒமிகோண் பீ.ஏ 2 என்பது ஆபத்தானதல்ல என்பதால் அவர் கடந்த இரண்டு வருட காலமாக நிலவிய தடைகளை விலத்துவார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரெஸ்ருரன்ற் இரவு நேரம் முழுமையாக திறக்க முடியும், தேவாலயங்களில் சமூக இடை வெளி கோரப்படாது போன்ற தகவல்கள் வரலாம் என்றும் கூறுகிறது செய்தி.
எனினும் மேலும் 2 முதல் 3 வாரங்கள் கொரோனா பாஸ் காட்டுதல், முகக்கவசம் அணிதல் அவசியம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தடை விலகுமா..?
இயல்பு வாழ்வு திரும்புமா..?
கொரோனா பேரழிவில் இருந்து மனித குலம் விடுபடுமா..? நல்ல செய்திகள் இனி படிப்படியாக வரும் என்று எதிர்பார்ப்போம்.
அம்மையாரே விரைந்து வருக, நெடு நாள் தடைகளை விலத்துக.
நோயினால் பாயில் கிடப்பவனும் கொஞ்சம் தலை நிமிரட்டுமே..
நாளை மாலை என்ன சொல்லப் போகிறார் மெற்ற பிரடிக்சன் பார்க்கலாம், அதற்குள் அவசரம் வேண்டாமே..
அலைகள் 25.01.2022