3 எப் தொழிற்சங்க தலைவர் பதவி விலகினார் ஏன்..?

டென்மார்க்கின் பெரிய தொழிலாளர் நலத்திற்கான அமைப்பாக இருப்பது 3 எப் என்ற தொழிற்சங்கமாகும்.

இதன் தலைவர் பியா கிறிஸ்ரென்சன் பெரும் அழுத்தம் காரணமாக இன்று பதவியில் இருந்து தாமாக விலகினார். காரணம் இரட்டை வேட வாழ்வு அம்பலமானதால்..

இவர் நான்கு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், அத் தொடர்பை சம்மந்தப்பட்ட பெண்களிடையே மறைத்தபடி ரெட்டை வால் குருவி போல வாழ்ந்தாக குற்றம் சுமத்தப்பட்டது.

ஏற்கெனவே இவருடைய தனிப்பட்ட வாழ்வின் கறுப்பு பக்கங்களை ஊடகங்கள் அம்பலத்திற்கு கொண்டு வந்திருந்தன. சம்மந்தப்பட்ட பெண்களில் ஒருவர் 3 எப் தொழிற்சங்கத்தின் வக்கீலிடம் இது தொடர்பான முறைப்பாட்டை வழங்கி பொது வெளியில் தகவலை வெளியிடுவேன் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று பெண்கள் இவரைப்பற்றிய தகவலை வெளியிட முன்வந்தனர்.

புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் புகையை போர்வையால் மூட முடியாத கட்டத்தை வந்தடைந்தது..

இந்த நிலையில் 3 எப் தொழிற்சங்கம் மேலும் தாமதிக்க முடியாத நிலையும் கூடவே வந்தது, காரணம் இது பல்லாயிரக்கணக்காக நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால் முடிவெடுக்க வேண்டியதும் அவசியமானது.

ஏனென்றால் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைவராக இருக்கும் ஒருவருடைய வாழ்வும் அவருடைய தனிப்பட்ட பெண்களுடனான தொடர்பும் வேறு வேறானதாக இருந்தாலும், தலைமைத்துவ ஆளுமைக்கு அது தவறான நடத்தை என்ற விமர்சனங்கள் பொது வெளியில் எழுந்தன. இத்தனைக்கு பின்னரும் விவகாரத்தை கண்டும் காணாதது போல இருக்கத்தான் முடியுமா..

தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில் இன்று செவ்வாய் 25.01.2022 முற்பகல் 3 எப் பின் 88 பேர் கொண்ட குழு தலைநகரில் உள்ள போபுண்ட் இல்லத்தில் கூடியது, இவருடைய பிரச்சனையை ஆய்வு செய்து முடிவெடுக்கவே கூடியது.

ஆனால் நிறுவன தலைவர் சபைக்கு சிரமத்தை ஏற்படுத்தாது தானாக விலகினார், ஆனால் பின்னால் பலத்த நெருக்குதல் இருந்துள்ளது. இவர் இது குறித்து கருத்து கூறாவிட்டாலும் தனது வாழ்வில் நீண்ட கால பக்கம் இதுவென்று கூறியள்ளதாக ஓர் ஊடகம் தெரிவிக்கிறது.

இவர் மேலும் பல முக்கிய அமைப்புக்களின் பொறுப்பு மிக்க பதவிகளை வகிக்கிறார், ஆபைடன்ஸ் லான்ட்ஸ் பாங்க், பென்சன் டென்மார்க், கொங்கலி தியேட்டர், கோல்டிங்கில் உள்ள எரிவாயு நிறுவனம் ஆகியவற்றின் பிரதான நிர்வாகத்தில் இருக்கிறார். இவைகளின் நிலை தெரியவில்லை.

எவ்வாறாயினும் பெரிய நிறுவன தலைவரின் நடத்தை பொது வெளிக்கு வந்தால் கண்டிப்பாக அது நிறுவனத்தை பாதிக்கும் என்ற கருத்தே இங்கு முக்கியமானது, மேலும் பலரை இது கதி கலங்கவும் வைக்கலாம். அவர் தானாகவே பதவி விலகியிருக்காவிட்டால் கூடியிருந்தவர்கள் விலத்தியிருக்கமாட்டார்கள் என்றும் கூற முடியவில்லை.

அலைகள் 25.01.2022

Related posts