கொவிட் தடுப்பிற்கான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒருவர் தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால் கூட அவருக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மூன்று தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட நபர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளும் இன்றி மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று (31) முதல் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் மூலம் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொவிட் பூஸ்டர் தடுப்பூசியில் சிறிய சிக்கல்கள் இருந்தாலும், அது தீவிரமான நிலை இல்லை என்று வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறினார்.
கொரோனா தடுப்பூசி செயல்முறையின் கீழ் இன்றும் பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.