வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது,
வாரி அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுள்ளது. வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது, எமர்ஜென்சி இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள்.
நம் நாட்டு மக்கள் கொரோனா பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் கூட கவனிப்பதில்லை என ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி சாடியுள்ளார். எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக் கூடாது” என்றார்.