ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
‘ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும். ஜெனிவா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆகையால், ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு சாதகமான முறையில் இன்று பதிலளிக்கப்படும்’ என அவர் கூறியுள்ளார்.