உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 07
துன்பம் நமக்காக செயல்படும்போது !
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
அதிசீக்கிரகத்துpல் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம்
அதிகமான நித்திய மகிமையை உன்டாக்குகிறது. 2 கொரிந்தியர் 4;17
காலம், ஆரோக்கியம், பணம், சர்ந்தப்பம், மக்கள் போன்ற உலகத்தின் காரியங்கள் உங்களுக்கு எதிராக செயற்படுவதுபோல தோன்றுகிறதா? சுpல வேளைகளில் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு காரியமும் நமக்கு எதிராக செயற்படுவதுபொல நாம் உணருகிறோம். நாம் தேவனை நம்ப வேண்டும் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் நமது வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
தன்னுடைய வாழ்க்கையில் பலதோல்விகளைச் சந்தித்த என்னுடைய கிறிஸ்தவ நண்பர் ஒருவர், வாழ்க்கையில் துன்பங்கள் வகிக்கும் முக்கியமான பங்கைக் குறித்து எனக்கு தெரியப்படுத்தினார். ”அதிசீக்கிரகத்துpல் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் அதிகமான நித்திய மகிமையை உன்டாக்குகிறது ” என்ற வேதப் பகுதியிலிருந்து ஒரு வார்த்தையை அவர் எனக்கு வலியுறுத்தினார்.
என்னுடைய நண்பர் இவ்வாறு விளக்கமளித்தார். ” நம்முடைய துன்பங்கள் நமக்கு எதிராக செயற்படுகின்றன என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவை நமக்காகச் செயற்படுகின்றன என்று தேவன் கூறுகிறார். அவை நித்திய காலத்திற்கு நிலைத்து நிற்கும் ஒரு மகிமையை உருவாக்குகின்றன. நம்முடைய சோதனைகளோடு ஒப்பிட்டால், அந்த மகிமை மிகவும் அதிகமானது. அதனால் நம்முடைய இருதயம் சோர்ந்து போவதில்லை ”.
தேவனுடைய பார்வையில், நம்முடைய ஆழமான ஏமாற்றங்களும், துயரங்களும் ” ஒரு நொடிப்பொழுதுக்கு ” மட்டும் செயற்படுபவையாகும். நாம் சோதனைகளைச் சந்திக்கும்போது, இதை ஏற்றுக் கொள்வது நமக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் நம்முடைய அன்பான பரலோக பிதாவின் வார்த்தையை நாம் நம்பவேண்டும்.
நமக்கு எதிராகச் செயற்படும் காரியங்களை தேவன் தம்முடைய கரங்களில் எடுத்து, அவை நமக்காகச் செயற்படும்படி செய்கிறார் என்ற உண்மை நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. நாம் விசுவாசத்தினால் அவருடைய செயல் நோக்கத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நாம் தேவனை எவ்வாறு விசுவாசிப்பது என்பதைக் கற்றுக் கொள்வதற்காக கடினமான சூழ்நிலைகளை தெரிந்து கொள்வதற்கு விரும்புவதில்லை. எனவே தேவன் தம்முடைய பரிபூரணமான ஞானத்தினால் நம்முடைய விசுவாசத்தைப் பெலப்படுத்தும் சூழ்நிலைகளுக்குள் பல வேளைகளில் நம்மை வழிநடத்துகிறார்.
மகா இரக்கம் நிறைந்த நல்ல பிதாவே, எனது போராட்டமான சூழ்நிலையை நீங்கள் அறிந்திருக்கீர்கள். நூன் சோர்ந்துபோய் வழிதவறி நடக்காமல், உம்மில் வைக்கும் விசுவாசத்தின் ஊடாக பயம் நீங்கி வெற்றி வாழ்வுவாழ எனக்கு கிருபை தந்து வழிநடத்தும் பிதாவே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark