கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் வைத்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளார்.
பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் சிறப்பு திருப்பலி பூஜையை நடத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காக ஆன்மீக ரீதியிலான தலையீட்டை பெற்றுக்கொள்வது இந்த திருப்பலி பூஜையின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்துக்கொள்ளும் ஐரோப்பாவில் வாழும் இலங்கையருக்கு இதன் ஒருங்கிணைப்பாளர்களான இத்தாலியில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புனித பாப்பரசர், திருப்பலி பூஜையில் கலந்துக்கெள்வாரெனவும் கூறியுள்ள ஒருங்கிணைப்பாளர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்று தரும்படி பாப்பரசரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.