ஜெயலலிதா உயிரை காக்க எடுக்கப்பட்ட இறுதி முயற்சிகள்

ஜெயலலிதா உயிரை காக்க எடுக்கப்பட்ட இறுதி முயற்சிகள் குறித்து விளக்கம் கேட்டோம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த டிசம்பர் 2016 ஆம் தேதி டிசம்பர் 4 ஆம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான் என்று அப்பல்லோ டாக்டர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகினார்.

அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில்,ஜெயலலிதா அவர்களுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது என்றும்,உடனே அவருக்கு தேவையான மருத்துவ முறைகள் அனைத்தையும் தாங்கள் முறையாக பின்பற்றியதாகவும் அப்பல்லோ மருத்துவர் கூறினார்.

இந்தநிலையில், செய்தியாளர் சந்திப்பில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-

ஜெயலலிதா உயிரை காக்க எடுக்கப்பட்ட இறுதி முயற்சிகள் குறித்து விளக்கம் கேட்டோம். ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட பிறகு முறையான சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறினார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது. வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதிக்கு பின்னர் பன்னீர்செல்வத்தை அழைத்து ஆணையம் விசாரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Related posts