பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்து தொழிற்சங்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பில் தனியார் பேருந்து சங்கங்களுக்கும் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் போக்குவரத்து அமைச்சில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தினால் பேருந்து தொழிற்சங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் மானியம் அல்லது பேருந்து கட்டண அதிகரிப்பை பேருந்து தொழிற்சங்கங்கள் முன்மொழிந்துள்ளன.

எரிபொருள் மானியம் கிடைக்காத பட்சத்தில் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 30 ரூபாவாகவும் ஏனைய கட்டணங்களை 25 முதல் 30 வீதமாகவும் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்தை அதிகரிக்காமல் எரிபொருள் மானியம் வழங்க கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts