’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் உண்மைக்கு புறம்பானது என்று தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
1990-களில் காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக இந்த படத்தை வெகுவாக வரவேற்றுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் பலவும் படத்திற்கு வரிச்சலுகை அளித்தன.
இந்தநிலையில், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, “ காஷ்மீர் பண்டிட்கள் புலம் பெயர்ந்து சென்ற துயரமான தருணத்தின் போது பரூக் அப்துல்லா முதல் மந்திரியாக இல்லை. ஜெக்மோகன் கவர்னராக இருந்தார். அப்போது மத்தியில் பாஜக ஆதரவுடன் விபி சிங் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது.
உண்மையை சித்தரிக்கக் கூடாது. அது சரியானது கிடையாது. பயங்கரவாதத்தால் காஷ்மீர் பண்டிட்கள் பாதிக்கப்பட்டால் அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஆனால், முஸ்லீகள் மற்றும் சீக்கியர்களின் தியாகத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. தங்கள் இல்லத்தை விட்டு சென்ற அனைவரையும் திரும்ப வரவைப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மதப்பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது.
’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் கமர்ஷியல் படமாக இருந்தால், யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டதாக படத்தயாரிப்பாளர்கள் கூறுவார்களேயானால், உண்மை தலைகீழாக இருக்கும்” என்றார்.