பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் கடந்த மார்ச் 10ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டின் 48ஆவது இலக்க பயங்கரவாத (தற்காலிக) சட்டத்தின் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலமே இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.