மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைமைப் பதவியிலிருந்தும் மே 1ஆம் திகதி முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவர், எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் விவசாயிகளுக்கு நட்டஈடு மற்றும் உரம் வழங்குமாறு வலியுறுத்தி பதவி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
—–
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது .
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் நடந்த இந்த போராட்டத்தில் மண்ணெண்ணெய் , பெற்றோல் , சமையல் எரிவாயு , பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
——