வெள்ளி தோறும் ஓர் சிந்தனை! இரட்சிப்பின் வசனம். 01. 04 202
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
அவரால் தம்மைத்தாமே ரட்சித்துக்கொள்ள முடியவில்லை !
மற்றவர்களை ரட்சித்தான், தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திரானியில்லை.
மத்தேயு 27.42
கிராமங்களில் ஊழியம் செய்த போதகர் வாழ்வில் நடைபெற்ற ஓர் சம்பவத்தை இந்தவாரசிந்தனையாக எழுதுகிறேன்.
குறிக்கப்பட்ட போதகர் கிறிஸ்தவரல்லாத விவசாயி ஒருவரின் வீட்டில் குடியிருந்தார். இயேசுவைப்பற்றி அவரிடம்கூறி அவரை வழிநடத்த சரியான வேளைக்கு காத்திருந்தார். கடைசியாக ஒருநாள்அதிகாலையில் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. தன்னுடன் கோழிக்கூட்டுக்கு வரும்படி அந்தவிவசாயி அவரைக் கேட்டுக் கொண்டான். அங்கே ஒரு கோழி அமர்ந்த நிலையில் இருந்தது.அதன் குஞ்சுகள் செட்டையின் கீழிருந்து வெளியே எட்டிப் பாரத்துக் கொண்டிருந்தன. ” அந்தக்கோழியைத் தொட்டுப்பாருஙகள் ” என்று விவசாயி போதகரிடம் கூறினான். அதைத்தொட்டுப்பார்த்த போதகர் அந்தக் கோழி செத்து விறைத்துப் போயிருப்பதைக் கண்டார்.
“அதன் தலையின் மீது உள்ள காயத்தைப் பாருங்கள், ஒரு மரநாய் அதைக் கடித்து இரத்தத்தைமுழுவதும் உறிஞ்சிக் குடித்து விட்டிருக்கிறது. எங்கே அது தன் குஞ்சுகளைக் கடித்துவிடுமோஎன்ற அச்சத்தில் கோழி தன் இடத்தை விட்டு நகரவில்லை” என்று விவசாயி கூறினான்.
” ஆம், அது கிறிஸ்துவைப் போலிருக்கிறது. இயேசுவானவர் சிலுலையின் வேதனைகள்முழுவதையும் சகித்துக் கொண்டார். அவரால் தமது உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால் அவர் நகர்ந்திருந்தால், நாம் பாவமன்னிப்பை, நித்திய வாழ்வை இழக்கப்பட்டுப் போயிருப்போம் ” என்று போதகர் கூறினார். இந்த எளியவார்த்தைகள் அந்த விவசாயியின் இருதயத்தைத் தொடும்படி பரிசுத்த ஆவியானவர் கிரியைசெய்தார். சிலுவையிலே தம்மைக் காப்பாற்றுவதைவிட சிலுவையில் நம்மை இரட்சிப்பதைத்தெரிந்து கொண்ட கிறிஸ்துவின்மீது அந்த விவசாயி விசுவாசம் வைத்தான்.
கிறிஸ்து அருளும் இரட்சிப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையைஅவருக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்களா? நீங்களும் நானும் ஜீவிக்கும்படி அவர் தமது ஜீவனைக்கொடுத்தார். தேவனுடைய கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறவர்களை எதுவும் அசைக்கமுடியாது.
இந்த பாஸ்காக காலத்தில் இந்த உண்மையை அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல, அவரைவிசுவாசித்து அவரின் பாதுகாப்புக்குள் வருவோம். இச்சிந்தனையை உங்கள் முகநூலில் பகிர்ந்து கொண்டு, நாம் நமது நண்பர்களையும்
தேவ ஆசீவாதத்திற்குள் நடத்துவோம்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark