மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ´நாட்டை தெருவுக்கு கொண்டுவந்த அனைத்து திருடர்களை விரட்டியடிப்போம்´ எனும் தொனிப் பொருளில் அரசுக்கு எதிராக இன்று (06) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலாச்சார பீட்ட மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை அடுத்து இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாக்தில் நூற்குக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றினைந்தனர்.
இதனை அடுத்து மின்சாரத்தை தடையின்றி வழங்கு, அதிகரிக்கும் வாழ்கைச் செலவை குறை, மக்களை இருள் வாழ்கைக்கு தள்ளதே, மக்களை பட்டிச்சாவை சாவுக்கு தள்ளாதே, பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு வழங்கு, கோட்டா வீட்டுக்கு செல் போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏற்தியவாறு கோஷங்கள் எழுப்பி கொண்டு கல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியாக செங்கலடி சந்திக்கு சென்று அங்கு சுமார் ஒருமணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் ஆர்பாட்டகாரார்கள் அங்கிருந்து மீண்டும் பேரணயாக பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைந்த பின்னர் கலைந்து சென்றனர்.
இதேவேளை, குறித்த பல்கலைகழகத்து மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவும் நேற்று திங்கட்கிழமை காலையிலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.