சட்டமா அதிபர் திணைக்களத்தை சுற்றிவளைத்த சட்டத்தரணிகள்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னாள் சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தற்போதைய ஆட்சியை இராஜினாமா செய்யுமாறு கோரி அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
சில முக்கியமான வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

——

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறும் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்த வீடியோ ஒன்று வௌிவந்துள்ளது.
ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மக்களுடன் இணைந்து நிற்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

——

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரியும் இன்று முற்பகல் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார்.
இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான தான் இந்த தீர்மானித்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

——

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (05) 303.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 293.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.

——

பாராளுமன்ற அமர்வுகள் நாளை (06) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts