நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்ற உத்தரவு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து கவர்ஸ் கோபரேட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் கோரிக்கை விடுத்தால் அதனை அன்றைய தினம் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

——

(UPDATE 10.01 am) – பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(UPDATE 10.16 am) – பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(UPDATE 10.20 am) – சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

(UPDATE 10.31 am) – சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்ப தெரிவித்துள்ளார்.

(UPDATE 10.40 am) – தானும் 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

(UPDATE 10.50 am) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயேற்சையாக செயற்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

(UPDATE 12.12 pm) – கட்சி தலைவர்களுக்காக விஷேட கூட்டத்திற்கு சபாநாயகர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

Related posts