அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாட்டிற்கு செல்ல தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கீர்த்தி தென்னகோனினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
—-

அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தில் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், கூட்டணியின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
—–

ஜனாதிபதி பதவி விலகுவார் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் எந்தவொரு தீர்மானத்தையும் விவாதிக்கத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது பதவியில் இருந்து முன்வைக்கும் எந்தவொரு பிரேரணையினாலும் நாட்டில் நிலவும் அமைதியின்மையை தணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
—–

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
—–

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் வெளியேறுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உயரடுக்கினர் முதல் சாதாரண பயணிகளின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளையும் செயலிழக்கச் செய்தல் அல்லது தளர்த்துவதோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
—–

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற அலுவல்கள் ​நேற்று (06) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி பாநாயகர் இதனைத் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்..
—–

இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில், அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் தாக்கம் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள குறித்த ஆலோசனை தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்திள்ளது.
அத்துடன் இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பான ஆலோசனையின் ஒட்டுமொத்த மட்டம் தொடர்ந்தும் 3 இல் உள்ளது என்பதுடன், 2019 ஏப்ரலில் பயங்கரவாதம் தொடர்பில் வழங்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் அவ்வாறே உள்ளதாக நினைவில் கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று மற்றும் எரிபொருள், மருந்துகளின் தட்டுப்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தி இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறித்த அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Related posts