ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை புறக்கணித்த

ஜனாதிபதியுடன் இன்று (12) நடைபெறவிருந்த கலந்துரையாடலைப் புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

—-

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (12) 329.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 319.20 ரூபாவாக பதிவாகியுள்ளது.

—–

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் மீளச் சொலுத்துதல் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கை அரசு சர்வதேச மூலதனச் சந்தைகள் ஊடாக வழங்கப்படும் பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts