பெரிய வெள்ளி !
இயேசு : பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க்கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி,
ஜீவனைவிட்டார். லுாக்கா 23 . 43
இயேசுவின் மரணத்தை வருடா வருடம் பெரிய வெள்ளிக்கிழமை நினைவுகூருவது வழக்கமானஒன்றாகும். ஆனால் அந்த மரணத்தை நினைவுகூரும் அதேவேளையில், அம்மரணத்தின்தாற்பரியத்தை அறியாமலோ அல்லது நினைவுகூராமலோ விட்டு விடுகிறோம். எனவே இன்றையதியானம் கிறிஸ்துஇயேசுவின் மரணத்தின் தாற்பரியத்தை விளக்கும் தியானமாக உள்ளது.
இந்த உண்மையை அப்.பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் இவ்விதம் விளக்கி எழுதுகிறார்.ரோமர் 3:3-26 இல் எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமை யற்றவரகளாக இருப்பதனால்இலவசமாக கிருபையினாலே கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும்விசுவாசத்தினாலே நாம் நீதிமான்களாக்கப் படுகிறோம். அதே வேளையில், நாம் செய்தபாவத்தைக் குறித்து தேவனுடைய கண்ணோட்டத்தையும் அவ்விடத்தில் விளக்கியுள்ளார்.
முற்காலத்தில் நாம் செய்தபாவங்களை தேவன் பொறுத்துக் கொண்ட அதேவேளையில், பாவத்திற்கு எதிரான தேவகோபத்தையும் விட்டுவிட முடியாத நீதியுள்ள தேவனாகவும் அவர்இருக்கின்றார். ஆகவே தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாக கிறிஸ்து இயேசுவைகிருபாதாரப்பலியாக ஏற்ப்படுத்தினார். கிருபாதாரப்பலி என்பது உள்ளான ஆழமான அர்த்தம்கொண்ட ஒன்றாகும். மனிதனுடைய பாவத்திற்கு எதிரான தேலனுடைய கோபமானது மனிதன்மல்விழாதபடி மனிதனுக்கும் தேவனுக்குமிடையில் நின்று தேவனுடைய கோபத்தை தன்மேல்ஏற்றுக்கொண்டதே கிருபாதாரப்பலியாகும். இச்சொல்லின்மூலம் அல்லது கிறிஸ்துவின்மரணத்தின்மூலம் பாவம் எவ்வளவு அகோரமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். தேவனுடைய வார்த்தையும் அதனை மிகத்தெளிவாக பலஇடங்களில் எடுத்துக்காட்டுகிறது.
அருமையானவர்களே, பாவத்தைக் குறித்து நாம் அலட்சியமாக அல்லது இலகுவாக sorry என்றவார்த்தையில் எம்முடைய கொடுரமான பாவங்களுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறோமா? அல்லதுபாவத்தைக் குறித்து அலட்டிக்கொள்ளாமல் அப்படியே மறந்து விடுகிறோமா? அருமையானதேவஜனமே, இதை வாசிக்கும்போது பாவத்தைக் குறித்த அலட்சியப் போக்கைக்குறித்து தேவன்உணர்த்துவதை உன்னால் உணர முடிகிறதா? அதேவேளை பாவத்திற்கு எதிரான தேவனுடையகோபத்தை இன்று உன்னால் உணரமுடிகிறதா? அவ்விதம் உணருவாயானால் கிறிஸ்துவின்மரணத்தின் தாற்பரியத்தைும் உன்னால் உணரமுடியும். எம்முடைய பாவத்திற்குதேவனிடத்திலிருந்து வெளிப்பட்ட தேவகோபத்தினால் நீங்களும் நானும் எரிந்துசாம்பலாகிவிடாதபடி கிறிஸ்துவின் சிலுவை மரணம் அதை மறைத்துள்ளது. ஆகவே அதைஉணர்ந்தவர்களாக இன்று நாம் எமக்காக மரித்த கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவோமாக.
ஒரே மனதோடு தேவனை நோக்கி பார்ப்போம்.. தேவனே, என்னுடைய பாவம் எவ்வளவு கொடுரமானது என்பதையும் பாவத்திற்கு எதிரான உம்முடைய தேவ கோபத்தையும் உணரச்செய்தபடியால் நன்றி அப்பா. இன்றிலிருந்து கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணத்தின் தாற்பரியத்தை-தியாகத்தை உணர்ந்தவனாக வாழ உமது கிருபைதந்து என்னை வழிநடத்தும், ஆமென்.
இந்த பாஸ்காக காலத்தில் இந்த உண்மையை அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல, அவரைவிசுவாசித்து அவரின் பாதுகாப்புக்குள் வருவோம்.
அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark