ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரம்புக்கனை சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
—–
தனது தந்தையின் சார்பாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் நீதியை எதிர்பார்ப்பதாக பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிந்தவரின் மகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த நபரின் மகள், தனக்கு நிதியுதவி தேவையில்லை என்றும், இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்றும் கூறினார்.
ரம்புக்கனையைச் சேர்ந்த 42 வயதுடைய கே.டி.லக்ஷான் என்பவர் நேற்று ரம்புக்கனையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
……
நேற்றைய தினம் றம்புக்கணையில் இடம்பெற்ற அனர்த்தத்தை தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடுமையானதும் பாரபட்சமற்ற விசாரணைகள் பொலிஸாரால் நடாத்தப்படும் என தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
—-
பாணந்துறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாணந்துறை முச்சக்கர வண்டி சாரதிகள் நேற்று (19) முதல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.