சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை

நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நடத்திய சுமார் 6 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளையும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் நடத்தினர். நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

கோடநாடு எஸ்டேட் வாங்கியது எப்போது? அங்கு எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், சொத்துக்கள், நகைகள் தொடர்பாக சசிகலாவிடம் பல கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 6 மணி நேர விசாரனையின் போது சசிகலா ஒத்துழைப்பு கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை வீடியோவிலும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2017-ல் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை பற்றி இதுவரை 217 பேரை காவல்துறை விசாரித்துள்ளது.

Related posts