காலி முகத்திடலில் பதற்றமான சூழ்நிலை

போக்குவரத்துக்கு இடையூறாக காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் இன்று (01) காலை நடவடிக்கை எடுத்திருந்தனர்.இதையடுத்து வீதியோரத்தில் மேடை அமைக்க போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்தனர் இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமது. காலி முகத்திடலில் இருந்து மக்கள் குழுவொன்று அப்பகுதிக்கு வந்ததையடுத்து, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் மக்கள் நடத்திய போராட்டம் இன்றுடன் 23 நாட்களை கடந்துள்ளது. காலி முகத்திடலில் இன்று காலையிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

——

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன.மே தின கொண்டாட்டத்தை நடத்துவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின அணிவகுப்பு இந்த ஆண்டு கெம்பல் பூங்காவில் ஆரம்பமாகவுள்ளது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் இவ்வருடம் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவில்லை. மக்கள் விடுதலை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் நான்கு பகுதிகளிலும் மே தின ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.

Related posts