நாட்டு பணப்புழக்கம் 50 மில்லியன் வரை வீழ்ச்சி

நாட்டின் பிரச்சினையை ஒரு மாத்தில் தீர்க்க முடியும் என கூறினால் நான் பைத்தியகாரன் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (04) விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்களுக்கும் அதிகமாக செல்லும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 வருடங்களில் இந்த பிரச்சினையை தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 வருடங்கள் வரை இதனை நீடிப்பதா என்பது தொடர்பில் நாம் அனைவரினதும் கையில்தான் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் தற்போதைய வௌிநாட்டு பணப்புழக்கம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட இல்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துள்ளதாக அமைச்சர் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

—–

இலங்கையின் சில அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்கு டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளன.
அதன்படி, இலங்கை வங்கி – ரூ. 366.00
மக்கள் வங்கி – ரூ. 359.99
சம்பத் வங்கி – ரூ. 370.00
கொமர்ஷல் வங்கி – ரூ. 370.00
NDB – ரூ. 370.00
அமானா வங்கி – ரூ. 360.00.

—–

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 3 பில்லியன் டொலா்கள் (சுமாா் ரூ.23,000 கோடி) கடனுதவி அளித்துள்ளது.

இதுதொடா்பாக இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ளும் வகையில், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இலங்கைக்கு 1 பில்லியன் டொலா் வரை கடனுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தக் கடனை தேவைப்படும்போது இலங்கை பெற்றுக் கொள்ளும் வகையில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.

கூடுதலாக அரிசி, மருந்துகள், தொழில்துறை மூலப்பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களும் இந்திய கடனுதவியின் கீழ் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற பெட்ரோலியம் பொருள்களை வாங்க தனியாக 500 மில்லியன் டொலா் கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இது வெவ்வேறு வகையான எரிபொருள் அடங்கிய 9 சரக்குத் தொகுப்புகளை இலங்கைக்கு விநியோகிக்க வழிவகை செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து இதுவரை சுமாா் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் விரைவில் இலங்கை வந்து சேரவுள்ளது. கடந்த மே 2 ஆம் திகதி எரிபொருளுக்கு கூடுதலாக 200 மில்லியன் டொலா் கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்தது. இதுதவிர, எரிபொருள் கொள்முதலுக்கு 500 பில்லியன் டொலரை குறுகிய கால கடனாக இலங்கைக்கு இந்தியா அளித்துள்ளது.

இலங்கைக்கு சுமாா் 16,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியா வழங்கியுள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டின்போது நல்லெண்ண அடிப்படையில் கூடுதலாக 11,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 3 பில்லியன் டொலா்கள் (சுமாா் ரூ.23,000 கோடி) கடனுதவி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தினமணி)

—–

பாராளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
´நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவும்´ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, எதிர்ப்பாளர்கள் சிலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts