ஐநா சபையில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி..!

ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது

ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது .இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்திய தூதரகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது ;

அதில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐநா அவை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது .

இதற்காக ஐநா அவையின் ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்புத்துறை துணை இயக்குனர் மிட்டா கோசலிடம் 8 லட்சம்அமெரிக்க டாலருக்கான காசோலையை ஐநா வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

——

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இதனால், பதற்றம் நிலவுகிறது. இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலால், அகதிகளுடன் தேச விரோத கும்பல்களும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழக கடலோர பகுதிகளை உஷார் படுத்துமாறு மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்த கைதிகள் 58 பேர் தப்பி ஓடினர். இந்தக் கைதிகள் கடல் வழியாக இந்தியாவுக்கு ஊடுருவ வாய்ப்புள்ளதாலும், விடுதலைப்புலிகள், போதைப்பொருள் கும்பல்கள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய உள்துறை எச்சரிக்கையை கடலோர பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts